Swarnaabhisekam celebrations of Shri Ramagopalan, Hindu Munnani in Chennai



RSS Sarsanghachalak Mohan Ji's letter


திரு ராமகோபாலன்ஜியின் 91வது பிறந்தநாள் கொண்டாட்ட விழா காமராஜர் அரங்கத்தில் 5 மணியளவில் துவங்கியது.

தமிழ்நாட்டு பாரம்பரிய நடனம் வந்தவர்களை வரவேற்றது. அரங்கிற்குள் நுழையும் போது விநாயகர் தரிசனம்.

91 பெண்கள் ஆரத்தி ஏந்தி வரவேற்க மங்கள இசையுடன் நிகழ்ச்சி துவங்கியது. பின்னர் வீரமணி அவர்களின் இசை நிகழ்ச்சி. தொடர்ந்து கடம் வித்வான் ஸ்ரீ. விக்கு விநாயக்ராம் அவர்களின் கடம் என நிகழ்ச்சி களை கட்டியது.அதன் பின்னர் பெண் குழந்தைகளோடு புஷ்பாஞ்சலி பரதநாட்டிய நிகழ்ச்சி..

விழா ஏற்பாடுகள் சிறந்த முறையில் செய்யப்பட்டு இருந்தன . மேடையில் இருந்த எல் சி டி திரையில் இந்து முன்னணியின் சாதனைகள்,கோபாலன் ஜியின் வாழ்க்கை பயணம், வீரத்துறவி பற்றிய பிரமுகர்கள் பேட்டி போன்றவை தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டது சிறப்பாக இருந்தது.. வின் டிவி குழுவினர் நேரலையில் அருமையாக ஒளிபரப்பினர்..

பல்வேறு கோவில்களில் இருந்து ப்ரசாதங்களும் மரியாதைகளும் வந்து சேர்ந்தபடி இருந்தன.. பல்வேறு இந்து அமைப்பினை சேர்ந்த பிரமுகர்கள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் இருந்ததும் அதை நிகழ்ச்சி தொகுப்பாளர் மேடையில் இடை இடையே குறிப்பிட்டு வரவேற்றதும் பாராட்டுதலுக்குரியது

கலைநிகழ்ச்சிகளுக்கு பின்னர் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் ஹிந்து சமயம் குறித்து பேசினார். தன் உரையின் போது இந்து மதம் நமக்கு வழிபாடு முறைக்கான சுதந்திரத்தை வழங்கி உள்ளது. அந்த சுதந்திரத்தை முறையாக பயன் படுத்தி கொள்ளவேண்டும் என்றார். திரு ராமகோபாலன்ஜி நாத்திக பிரச்சாரம் கோலோச்சிய காலத்தில் 80களிலேயே தைரியமாக வீரத்துறவியால் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் இந்து முன்னணி என்றார்

தொடர்ந்து வீரத்துறவி இராம.கோபாலன் ஜி மேடைக்கு வந்தார். அரங்கமே எழுந்து நின்று கரகோஷத்துடன் தங்கள் மரியாதையையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியது. வீரத்துறவி மேடைக்கு வந்ததும் திருவான்மியூர் வேத பி பாடசாலையை சேர்ந்த திரு நீலகண்ட கனபாடிகள் குழு வேத கோஷம் முழங்க ஆசீர்வாதம் செய்தனர்

தொடர்ந்து நிகழ்ச்சியில் கலைவிருந்து அளித்த கலைஞர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது. இந்து முன்னணி மாநில நிர்வாகிகள், மத்திய அமைச்சர் திரு பொன்னார்,, நீதியரசர் திரு வள்ளிநாயகம் ராமகிருஷ்ணா மடம் துறவி பூஜனிய விமூர்த்தானந்தர், வேலூர் வி ஐ டி துணைவேந்தர் திரு செல்வம், பா ஜ மாநில தலைவர் டாக்டர் தமிழிசை திரு இல நடராசன் ஆர் எஸ் எஸ் திரு இல கணேசன் திரைப்பட ஐ யக்குனர் திரு கஸ்தூரி ராஜா திரு அமர் பிரதாப் ரெட்டி ஆகியோர் மேடையில் வரவேற்கப்பட்டனர்

அனைவரும் மேடையில் அமர்ந்தபின் தலைவர்கள் வாழ்த்துரை துவங்கியது.திரு பக்தன் ஜி வரவேற்புரை வழங்கினார். வரவேற்ப்புரையில் கோபாலன் ஜி சீர்காழியில் பிறந்தார். அங்கே பிறந்த சம்பந்தர் சைவத்திற்க்காக சுற்று பயணம் மேற்கொண்டார். அங்கே பிறந்த திருமங்கையாழ்வார் வைணவத்திறகாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார் .அந்த மமண்ணில் பிறந்த வீரத்துறவியோ இந்து மதத்திற்க்காக இன்றளவும் பயணிக்கிறார் என்று குறிப்பிட்டார்.

ஆர் எஸ் எஸ் சர்சங்கசாலக் திரு மோகன் பகவத் அனுப்பிய வாழ்த்து மடல் மேடையில் வாசிக்கப்பட்டது. கடுமையான ஒழுக்கம் ,சிந்தனை செயலின் தூய்மை ஆகியவற்றை கடைப்பிடிப்பவர் திரு கோபாலன்ஜி என்று கடிதத்தில் வாழ்த்தி இருந்தார்

பூஜனீய விமூர்த்தானந்தர் பேசுகையில் பாரத தேசத்தின் லட்சியத்தின அடிப்படையானதொண்டும் துறவும் இவையே வீரத்துறவியின் வாழ்க்கை முறை என்று பாராட்டினார். இரவு எவ்வளவு நேரம் கண் விழித்தாலும் அதிகாலை மணிக்கு எழுந்து 1008முறை காயத்ரி மந்த்ர உச்சாடனம் செய்வதே இவரின் மன உறுதிக்கு காரணம் என்றார். விவேகானந்தர் கேட்ட 100 இளைஞர்களில் முதல் இளைஞர் திரு ராமகோபாலன்ஜி என்று சிலாகித்து பேசினார்.

மத்திய அமைச்சர் திரு பொன்னார் பேசுகையில் 8௦களில் திரு ராமகோபாலன் ஜி அவர்களுக்கு உதவியாளராக அவரோடு பயணம் செய்த நினைவுகளை குறிப்பிட்டு பேசினார் .

குமுதம் ஜோதிடம் புகழ் திரு ஏ எம் ராஜகோபாலன் பேசுகையில் சிருங்கேரி பீடம் பூஜனீய வித்யாரண்யர்யருக்கு பிறகு நமக்கு கிடைத்த வீரத்துறவி திரு ராமகோபாலன்ஜி என்று கூறினார்

திரு அமர்ப்பிரதாப் ரெட்டி பேசுகையில் இந்துக்களுக்கு யாரும் ஸ் சத்தியத்தையும் அஹிம்சையையும் பற்றி யாரும் பாடம் நடத்த தேவை இல்லை. இப்போது இந்துக்களுக்கு தேவை சத்திய பராக்கிரமம்தான் என்று கோபாலன்ஜி கூறுவதை பின்பற்ற வேண்டும் ஏன்றார்

பா ஜ மாநிலத்தலைவர் திருமதி தமிழிசை பேசுகையில் இப்பேற்பட்ட மஹானுக்கு அவர் வாழ்நாளிலேயே தமிழகத்தில் காவி ஆட்சி பீடம் ஏற்க செய்வதுதான் சிறந்த கைம்மாறாக இருக்க முடியும் என்று உரைத்தார்

இயக்குனர் கஸ்தூரி ராஜா பாம்புக்கு நடுங்கும் மக்கள் இ ருக்கும் இக்காலத்தில் பாமுக்கே நடுங்கா வீரம் இருப்பதால்தான் அவர் வீரத்துறவி என்று பேசினார்

வி ஐ டி துணைவேந்தர் திரு செல்வம் பேசுகையில் கோபாலன் ஜியின் வது பிறந்த நாள் விழா வேலூர் கோட்டையில் நடைபெற்றதை ன் இணைவு கூர்ந்தார். வேலூர் மக்கள் ஜலகண்டேஸ்வரர் கோவிலை மறுபடி ஸ் தப்பித்த ராமகோபாலன்ஜிக்கு கடமை பட்டவர்கள் ஏ ன்று நன்றி கூறினார்

இறுதியாக திரு கோபாலன் ஜி தன ஏற்புரையில் எனக்கு பிறகு யார் வருவார்கள் என்ற கேள்விக்கே இடமில்லை. நான் போனால் எனக்கு பின்னால் பேர் வர 100பேர் இருக்கிறார்கள் என்று கூறினார்

Post a Comment

0 Comments