RSS Statement condemning the continuous attacks in Tamilnadu


 
RSS Statement by Sanghachalak (Uttar and Dakshin Tamilnadu) condemning the continuous attacks made on the leaders of Hindu organizations.

ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் தென் தமிழக தலைவர் திரு.ஆர்.வீ.எஸ்.மாரிமுத்து வடதமிழகத் தலைவர் திரு.டாக்டர் எம்.எல்.ராஜா ஆகியோர் இன்று (05/10/2016) வெளியிட்டுள்ள அறிக்கை.

கண்டன அறிக்கை

தமிழகத்தில் ஹிந்து இயக்கப் பிரமுகர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாவதும், படுகொலை செய்யப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் பல தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

கோவையில் ஹிந்து முன்னணி மாநகரச் செய்தித் தொடர்பாளர் திரு.சசிகுமார் படுகொலை செய்யப்பட்டார்.


திண்டுக்கல்லில் ஹிந்து முன்னணி நகர செயலாளர் சங்கர்கணேஷ் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. கடும் காயங்களுடன் மயிரிழையில் அவர் உயிர் தப்பினார். திருவல்லிக்கேணி நகர ஆர்.எஸ்.எஸ். செயலாளர் நரஹரி நேற்று கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அவரும் பலத்த காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். 2014 ஆம் வருடம் திருவல்லிக்கேணி ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் திரு.ராஜ்குமார் மீதும் இதே போன்று தாக்குதல் நடத்தப்பட்டது.

வேலூரில் ஹிந்து முன்னணிப் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மேலும் திருப்பூர், வேலூர், திண்டுக்கல் பகுதிகளில் பா.ஜ.க., ஹிந்து முன்னணி பிரமுகர்களின் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.

மேற்கண்ட எந்த ஒரு சம்பவத்திலும் குற்றவாளிகளைக் கண்டுபிடித்திட தீவிர முயற்சி எதையும் தமிழக காவல்துறை மேற்கொள்ளவில்லை. மாறாக கொலை செய்யப்பட்டவர்களை பற்றிப் அவதூறு செய்திகளை பரப்பி வருகிறது.

படுகொலைகளும் தாக்குதல்களும் நன்கு திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகிறன்றன. இக்கொலை செயல்களுக்குப் பின்னனியில் யார் இருக்கின்றனர் என்பது சாதாரண மக்களுக்கும் கூட தெரியும். ஆனால் நமது காவல்துறையோ கண்ணை மூடிக்கொண்டு கையை கட்டிக்கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்ற ஜனநாயக ரீதியிலான நிகழ்ச்சிகளுக்கு கூட ஹிந்து இயக்கங்களுக்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்களுக் கும், நாட்டின் பல இடங்களில் தேடப்பட்டு வரும் நக்சல் தீவிரவாதிகளுக்கும் தமிழகம் நல்ல பாதுகாப்பான புகலிடமாக இருந்து வருகிறது.

இதே நிலைமை நீடிப்பது நலலதல்ல. மக்களுக்கு தமிழக அரசின் மீதும் காவல்துறையின் மீதும் நம்பிக்கை இல்லாமல் போகுமானால் சட்டம் ஒழுங்கு பாதிக்கக்கூடும் என்பதை காவல்துறை உணர வேண்டும். தாக்குதல் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்கள் மீது சட்ட பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து கடும் தண்டனைகள் வழங்கிட வேண்டும்.

இப்படிக்கு





ஆர்.வீ.எஸ்.மாரிமுத்து டாக்டர் எம்.எல்.ராஜா                                                                                                     

Post a Comment

0 Comments